சிறிய விஷயங்களில் பல சமயம் வினோதம் ஒளிந்திருக்கும். அப்படிப்பட்ட ஒன்று - UKG துவங்கி MCA வரை ஒவ்வொரு வகுப்பிலும் என்னுடன் Ravi, Sujatha,Venkatesh என்ற பெயரில் மூன்று பேர்கள் தொடர்ந்து படித்தது...இதில் ஆறாம் வகுப்பு annual exam துவங்கும் முன் இறுதி வாரத்தில் நிகழ்ந்த "இங்க் அடிக்கும்" சம்பவம் - எனக்கு பின்னிருக்கையில் அமர்ந்திருந்த பையன்கள் முன்னிருக்கையில் இருந்த பெண்கள் மேல் ink அடிக்க நடுவில் அமர்ந்திருந்த நான் தான் தெளித்ததாக Sujatha எங்கள் class teacher Janaki teacher ரிடம் புகார் செய்தார். ஜானகி டீச்சர் எனக்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை maths teacher மற்றும் class teacher. நீ செய்தாயா என்று கேட்காமல் "why are you behaving like this" என்று கேட்டு class வெளியே நிற்க சொல்லி விட்டார். அன்றும் அதற்கு அடுத்த நாளும் சரியான முகூர்த்த நாட்கள். மதுரையில் முகூர்த்த நாள் என்றால் சந்து பொந்தெங்கும் பாட்டு கேட்டு கொண்டிருக்கும்.
செய்யாத ஒன்றுக்கு இப்படி செய்து விட்டாரே என்ற ஆத்திரத்துடன் வீட்டுக்கு வரும் வழியில் ஏகப்பட்ட கல்யாண மண்டபங்கள். வசந்த நகர் அருகில் உள்ள ஒரு மண்டபத்திலிருந்து கேட்டது "சிறை பறவை"யின் "ஆனந்தம் பொங்கிட". வழக்கமான violin bit துடன் சேர்ந்து கலக்கும் வீணை bit டும் இந்த பாட்டின் special. இதைப்பாடிய Sunandha நிறைய பாடல்கள் பாடாமல் போனது ஏனோ? வீட்டுக்கு வந்த பின் எனது வழக்கமான
யதாஸ்தானமான மொட்டை மாடிக்கு சென்று படிக்கத்துவங்குகையில் பின்தெருவில் இருக்கும் கல்யாண மண்டபத்தில் "ஒலிபரப்பு" துவங்கியிருந்தார்கள்.
யதாஸ்தானமான மொட்டை மாடிக்கு சென்று படிக்கத்துவங்குகையில் பின்தெருவில் இருக்கும் கல்யாண மண்டபத்தில் "ஒலிபரப்பு" துவங்கியிருந்தார்கள்.
நம் மக்களின் ரசனையே அலாதி. கல்யாணத்திற்கு முன் தினம் மாலை 4 மணிக்கு பந்தலில் speaker கட்டும் போதே பக்கத்துக்கு வீடுகளில் இருக்கும் நமக்கு குஷி பிறக்கும். கடவுளை கவர முதல் அரை மணி நேரம் "விநாயகனே வினை தீர்ப்பவனே" ["வேழம் என்றால் யானை என்று அறிந்து கொண்டது இந்த பாட்டினால்தான்] என்று ஆரம்பித்து ஒரே பக்தி ரசம். திடீரென்று அப்பொழுது வெளி வந்திருக்கும் latest படத்தின் அதிரடி பாட்டுடன் பக்தியை மூட்டை கட்டி பரவசத்திற்கு தாவுவார்கள். இந்த மாற்றம் பெரும்பாலும் காலை 6.30 க்கும் மாலை 5.30 க்கும் நடக்கும். புதுப்பாட்டு புளித்து போனபின் "medium" பழைய [வந்து 3-5 வருடங்களான] பாடல்கள் துவங்கும். "மனமகளே மனமகளே வா வா" கேட்கிறதென்றால் கல்யாணம் முடிந்தது என்று அர்த்தம். பிறகு "பழைய" பாடல்கள் துவங்கும். அப்படித்தான் அன்றும் - செய்யாத ஒன்றுக்கு வெளியில் நிப்பாட்டி வைத்தார்களே என்று மொட்டை மாடியில் குறுக்கும் நெடுக்குமாக நடக்கையில் "ராசாத்தி உன்ன" - வைதேகி காத்திருந்தாள், "மயங்கினேன் சொல்லத்தயங்கினேன்" - நானே ராஜா நானே மந்திரி[இந்த படத்தில் வரும் "தேகம் சிறகடிக்கும்" பாடல் இதை விட நன்றாக இருந்தும் hit இல்லை],"அழகாக சிரித்தது" - டிசம்பர் பூக்கள், "பூ முடித்து" - என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான், "விழியே விளக்கொன்று" - தழுவாத கைகள், "பூவிலே மேடை" - [பகல் நிலவு] போன்ற பாடல்கள் Jayachandran ஐ எனக்கு அறிமுகம் செய்தன. இந்த பாடல்களை கேட்டுக்கொண்டே மாடியிலிருந்து கீழே வந்து "Bril" ink bottle ஐ எனது mickey mouse படம் போட்ட கறுப்பு கலர் bag இல் வைத்து விட்டேன். அடுத்த நாள் maths period வரை காத்திருந்து sujatha வின் முதுகில் அப்படியே ink bottle ஐ கவிழ்த்த பின் ஒரு சந்தோஷம். இதுவரை அடித்தே பார்த்திராத janaki teacher என்ன தைரியம் இருந்தா பாத்தா சாது இருந்துட்டு திருப்பியும் இப்படி பண்ணுவ என்று ஓரடி scaleஆல் உள்ளங்கையில் அடித்தது இன்னும் நினைவில் வலிக்கிறது. அன்று கிட்டத்தட்ட அழும் நிலையில் பழங்காநத்தம் bus stop இல் 5ஆம் நம்பர் பஸ் பிடித்து வசந்த நகர் கடக்கையில் மீண்டும் "சிறை பறவை" - அதே மண்டபம், அதே பாட்டு ஆனால் வேறொரு திருமணத்திற்காக. 4 வருடம் கழித்து 10th TC வாங்கும் பொழுது school office ரூமில் ஜானகி teacherரிடம் "I didn't spray ink first day. You did not believe so I did next day" என்று சொன்னதும் அவர் "I know" என்று என் முதுகை தட்டிக்கொடுத்ததும் மறக்க முடியாதவை. ஜெய்ஹிந்திபுரம் பகுதியிலிருந்து தினமும் தன் அண்ணன் சைக்கிளில் பின்புறம் அமர்ந்து பள்ளிக்கு வரும் இவர் இப்பொழுது எங்கிருக்கிறாரோ? "ஆனந்தம் பொங்கிட" கேட்கும் பொழுதெல்லாம் 4 சுஜாதாக்கள், திருப்பரங்குன்றம் பெரியார் 5ஆம் நம்பர் பஸ், janaki teacher, கல்யாண மண்டபங்கள், அதில் ஒலிக்கும் பாடல்கள், வசந்த நகரில் வளையும் சாலை, என்று நினைவுகள் படர்வது நிரந்தரமானது.
அரிது - இனிது set 4:
இந்த பாடல்களை இன்று வரை திருப்தியாக record செய்ய முடியவில்லை. ஒன்று clarity இருப்பதில்லை அல்லது கிடைப்பதே இல்லை. இப்பொழுது 50 வயது நெருங்கும் அன்றைய இளம் வயதினர் இவற்றை ரசித்திருக்கக்கூடும். படத்தின் பெயர்களும் சரியாக நினைவில் இல்லை.
1. பெண் என்பதோ பூ என்பதோ காதல் பெண்ணே...
2. மழை தருமோ என் மேகம்...[மனிதரில் இத்தனை நிறங்களா?]
3. தென்றலுக்கு என்றும் வயது...
4. பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு...
5. ஒரு சின்னப்பறவை அன்னையைத்தேடி.. [அன்னப்பறவை? ]
Mr. Kumaran, ninga TVS schoolil padithavara?
ReplyDeleteஒரு சின்னப் பறவை அன்னையைத்தேடி..படம் மதனமாளிகை.
ReplyDelete